Kuwait Tamil Islamic Committee  


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

மாபெரும் இஸ்ரா / மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சி!

பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம… 25-07-2008 வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் அஸர் தொழுகையை தொடர்ந்து இரவு 11 மணி வரை குவைத், ஹவல்லி பகுதியில் (அல்-மாஸ் உணவகம் எதிரில், மத்அம் கனாரீ / அல்-பஹ்ர் வணிக வளாகம் அருகில்) அமைந்துள்ள ‘ரிஹாபிலேஷன் சென்டர்’ அரங்கத்தில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ‘மாபெரும் இஸ்ரா / மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சி’, இளந்தளிர்களின் இனிய இஸ்லாமிய நிகழ்ச்சி’ மற்றும் ‘தமிழ் முஸ்லிம் ஆலிம் பெருமக்களுக்கு நினைவு பரிசுகள் வழங்குதல்’ என முப்பெரும் விழாவாக நடைபெற்றது. அல்ஹம்து லில்லாஹ்…


இச்சிறப்புமிகு நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் அஷ்ஷைக் டி.பி. அப்துல் லத்தீஃப் காஸிமி ஹழ்ரத் தலைமையேற்க, சங்கத்தின் துணைத்தலைவர் அல்ஹாஜ் ஏ.ஏ. கபீர் அலீ திருக்குர்ஆன் கிராஅத் ஓத, சங்கத்தின் ஆலோசனை குழு உறுப்பினர் ஜனாப் எம். ஜாஹிர் ஹுஸைன் வரவேற்புரையாற்ற, சங்கத்தின் துணைத்தலைவர்கள் மவ்லவீ அஷ்ஷைக் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ மற்றும் டாக்டர் கே.எஸ். அன்வர் பாட்சா ஆகியோர் முன்னிலை வகிக்க, சங்கத்தின் ஜமாஅத்துல் உலமா குழு உறுப்பினர் மவ்லவீ அஷ்ஷைக் எம்.எஸ். முஹம்மது ஷரீஃப் ஃபாஜில் மன்பஈ அறிமுகவுரையாற்ற நிகழ்ச்சிகள் இனிதே துவங்கின. முதல் அமர்வாக… மாலை 4 மணியளவில் அஸர் தொழுகையைத் தொடர்ந்து, சங்கத்தின் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா அஷ்ஷைக் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., நடத்துநராக செயல்பட, குவைத்தில் வசிக்கும் 12 வயதிற்குட்பட்ட தமிழ் முஸ்லிம் இளஞ்சிறார்களின் திறமைகளை வெளிகொணரும் வகையில் திருக்குர்ஆன் ஸூரா (வசனங்கள்), கலிமா, துஆ (பிரார்த்தனை) மற்றும் திக்ர் (இறை நினைவு) ஒப்புவித்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏறக்குறைய 75 இளந்தளிர்கள் பங்கேற்று தங்களின் திறமைகளை நிரூபித்தனர். பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும், பரிசுகளும் நிகழ்ச்சியின் இறுதியில் முக்கிய பிரமுகர்களின் கரங்களால் வழங்கப்பட்டன.

இரண்டாவது அமர்வாக… கடந்த மாதம் (ஜூன் 2008) சங்கம் ஏற்பாடு செய்த ‘3வது சொற்பொழிவு பயிலரங்கம் / எழுத்துப் பட்டறை’ முகாமில் பங்கேற்று சிறப்பான முறையில் பயிற்சி பெற்ற இளம் பேச்சாளர்களின் ‘உரைவீச்சு’ நடைபெற்றது. சங்கத்தின் இணைப்பொருளாளர் அல்ஹாஜ் எச். முஹம்மது நாஸர் ‘கடமைகளை நிறைவேற்றுவோம்’ என்ற தலைப்பிலும், சங்கத்தின் துணைச் செயலாளர் அல்ஹாஜ் எம். முனீர் அஹ்மத் எம்.ஏ., ‘மிஃராஜ் காட்டும் வாழ்வு’ என்ற தலைப்பிலும், மற்றும் சங்கத்தின் ஹவல்லி கிளை பொறுப்பாளர் ஜனாப் அ. ஹஸன் முஹம்மது ‘சமுதாயப் பணிகள்’ என்ற தலைப்பிலும் சிற்றுரையாற்றினர்.

மூன்றாவது அமர்வாக… மாலை 7:15 மணி முதல் மக்ரிப் தொழுகையை தொடர்ந்து ‘அண்ணல் நபியின் விண்ணுலக பயணம் - நன்மையே! மண்ணுலகில் வாழும் மானிடருக்கு!!’ என்ற கருப்பொருளில் ‘மாபெரும் இஸ்ரா / மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சி’ துவங்கியது. சங்கத்தின் ஜமாஅத்துல் குழு உறுப்பினர் மவ்லவீ ஹாஃபிழ் காரீ அஷ்ஷைக் எம்.டி.எம். அஜ்வத் ஃபாஜில் ரைவின்தி லாஹுரி (இலங்கை) ‘இஸ்லாமிய குடும்ப உருவாக்கம் - பெற்றோரின் பொறுப்பு’ என்ற தலைப்பிலும், சங்கத்தின் ஃபத்வா குழு உறுப்பினர் மவ்லவீ ஹாபிஃழ் காரீ அஷ்ஷைக் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ ‘இஸ்ரா / மிஃராஜ் விளக்கம்’ என்ற தலைப்பிலும், சங்கத்தின் பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் குழு உறுப்பினர் மவ்லவீ ஹாஃபிழ் காரீ அஷ்ஷைக் எம். மஹ்பூப் பாஷா ரஷாதி ‘சத்தியத் தூதரும் சமுதாயச் சேவையும்’ என்ற தலைப்பிலும் சிறப்பான முறையில் பேருரையாற்றினர்.

மாநாட்டின் தலைவர் மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் அஷ்ஷைக் டி.பி. அப்துல் லத்தீஃப் காஸிமி ஹழ்ரத் அவர்கள் ‘ஃமஸ்ஜிதுல் அக்ஸாவின் வரலாறும், யூதர்களின் சூழ்ச்சிகளும்’ என்ற தலைப்பில் ‘மஸ்ஜிதுல் அக்ஸா மீட்பு’ பிரகடனமாக நிறைவுரையாற்ற, சங்கத்தின் இணைப் பொதுச்செயலாளர் அல்ஹாஜ் ஏ.கே.எஸ். அப்துல் நாஸர் பி.ஏ., சங்கத்தின் நோக்கங்கள் மற்றும் செயற்பாடுகள் குறித்து எடுத்துரைக்க, சங்கத்தின் ஹவல்லி கிளை பொறுப்பாளர் ஜனாப் எம். முஹம்மது யூனூஸ் நன்றியுரையாற்ற, அல்ஹாஜ் அஷ்ஷைக் எஸ். ஷாஜஹான் ஹழ்ரத் அவர்களின் துஆவுடனும், இரவு உணவுடனும் நிகழ்ச்சிகள் இனிதே இரவு 11 மணிக்கு நிறைவுற்றன.

இச்சிறப்பு நிகழ்வில் ‘2008 - ஹிஜ்ரீ 1429 மாபெரும் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மாநாடு’ நிகழ்வையொட்டி நடத்தப்பட்ட ‘இஸ்லாமிய பொதுஅறிவு போட்டி’யில் சரியான முறையில் விடையெழுதியவர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலாவது, இரண்டாவது, மூன்றாவது மற்றும் பத்து ஆறுதல் பரிசுகளும், சரியான விடை எழுதிய அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

அத்துடன், சங்கத்தில் இணைந்து குவைத்தில் மார்க்கப் பணியாற்றும் தமிழ் இஸ்லாமிய அறிஞர் (ஆலிம்) பெருமக்களின் சேவைகளை பாராட்டி சங்கத்தின் தலைவர் மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் அஷ்ஷைக் டி.பி. அப்துல் லத்தீஃப் காஸிமி ஹழ்ரத் அவர்களின் திருக்கரங்களால் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.

 



"The Grand Isra' / Mi'raj Conference in Tamil" Conducted by 'Kuwait Tamil Islamic Committee (K-Tic)'

Kuwait Tamil Islamic Committee (K-Tic) is a non-profitable religious socio-welfare Organization of Tamil speaking Muslim community in Kuwait. It arranged a Conference in Tamil on Isra' / Mi'raj at Kuwait Rehabilitation Center - Hawally on July 25, 2008 Friday from 4 (after Asar prayer) pm till 11 pm.  The program was presided by Moulavi Al-Haj Ash-Shaikh T. P. Abdul Lateef Kasimi Hazrath (President, K-Tic) and started with recital / Qira'th from Holy Al-Qur'an by Al-Haj A.A. Kabeer Ali (Vice Precident, K-Tic) followed by the Welcome speech by Janab M. Zahir Hussain (Member of Advisory Board, K-Tic).


The whole meeting was convened, inaugurated & listed by Parangi Pettai Moulavaee Afzal-ul-Ulamaa Ash-Shaikh A. B. Khaleel Ahmed Baaqavee M.A., (General Secretary, K-Tic). 

Initially the conference stated with Tamil Muslim Children's (age below 12) program such as Holy Qur'an, Hadees, Thikr and Du'a rectitian. Morethan 75 childerns are participated. Worthy prizes are distributed with Certificates to the participants.

Before Magrib prayer, short speeches were delivered by following particiants in "3rd Public Stage Speech Training Camp" and "Writing Skills Workshop" conducted by K-Tic:

      Al-Haj H. Mohammed Nasar (Joint Tressurar, K-Tic),
      Al-Haj M. Muneer Ahmed M.A., (Joint Sectreatary, K-Tic)
      Janab A. Hasan Muhammed (In-charge, Hawally Branch, K-Tic)

                                               
After Magrib prayer, special lectures and valuable speeches on various topics including Isra' / Mi'raj were delivered by

      Moulavi Hafiz Qaari Ash-Shaikh (Sri Lanka) M.T.M. Mohammed Ajwad Fazil Raivindhi Lahoori 
      Moulavi Hafiz Qaari Ash-Shaikh M. Mahboob Basha Rashadi (Member of Workshop & Guidence Wing, K-Tic)
      Moulavi Hafiz Qaari Ash-Shaikh M. Muhammed Nizamudeen Baaqavee (Member of Fathwa Wing, K-Tic)

                                               
Grand Memento Shields was presented to the following Aalim Ulaama (Islamic Scholars) who made the Weekly Hadith Class at Hawally, a successful one which have now crossed 100 weeks.

1. Moulana Moulavi Ash-Shaikh T.P. Abdul Latheef Qasimi (President) - Trichy
2. Moulavi Ash-Shaikh M.S. Muhammad Meerasha Fazil Baqavi (Vice Precident) - Viswakudi
3. Moulavee Afzalul Ulamaa Ash-Shaikh A.B. Khaleel Ahmed Baaqavee M.A., (General Secreatary) - Parangi Pettai
4. Moulavi Qari Ash-Shaikh M. Zainul Aabideen Baqavi (Member of Lecturare Wing) - Muhammed Bunder
5. Moulavi Al-Hafiz Qari Ash-Shaikh M. Mahboob Basha Rashadi (Member of Workshop & Guidence Wing) - Salem
6. Moulavi Al-Hafiz Qari Ash-Shaikh A.R. Muhammad Ali Rashadi Fazil Mazhari (Member of Lecturare Wing) - Pondichery
7. Moulavi Al-Hafiz Qari Ash-Shaikh M. Muhammad Nizamuddeen Baqavi (Member of Fathwa Wing) - Adirampattinam
8. Moulavi Ash-Shaikh A. Abdus Salaam Dawoodi (Member of Fathwa Wing) - Permbalur
9. Moulavi Al-Hafiz Qari Ash-Shaikh M.T.M. Ajwad Fazil Raivindhi Lahuri - Srilanka
10. Moulavi Ash-Shaikh M.S. Muhammad Shareef Fazil Manbayi (Islamic Scolors (Jama'thul Ulam'a) Wing) - Perambalur
11. Moulavi Al-Hafiz Qari Ash-Shaikh F. Shaikh Dawood Siraji (Islamic Scolors (Jama'thul Ulam'a) Wing) - Sulthan Pettai
12. Moulavi Al-Hafiz Qari Ash-Shaikh A.R. Mohammed Ibraheem Manbayi (Islamic Scolors (Jama'thul Ulam'a) Wing)
13. Moulavi Ash-Shaikh A. Fakhruddeen Manbayi (Islamic Scolors (Jama'thul Ulam'a) Wing) - Perambalur
14. Moulavi Ash-Shaikh K. Sirajuddeen Hasani (Islamic Scolors (Jama'thul Ulam'a) Wing) - Pudhukottai
Ulama Award
giving Events


Click here to see the pictures

                                             
The vote of thanks delivered by Janab M. Mohammed Yunus (In-chargs, Hawally Branch, K-Tic) and Dua made by Al-Haj As-Shaikh M. Shajahan Hazrath. The conference was concluded with dinner at 11:00pm by grace of almighty Allah. The program was attended a large number of Tamil Muslim brothers with their families, relatives and friends from various parts of Kuwait and also from various Tamil Islamic / Muslim Associations both Tamilnadu and Srilanka.   

 

 

Join K-tic
K-TIC - All Rights Reserved 2008