குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) சார்பில் 23-05-2008 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 10.30 மணி வரை குவைத், மன்சூரிய்யா பகுதியில் உள்ள ரிஃபாயி தீவானிய்யா அரங்கத்தில் 'நம் பிள்ளைகளுக்கு ஏற்ற கல்வி எது? 12 மற்றும் 10ம் வகுப்புக்கு பிறகு உள்ள மேற்படிப்புகள் என்ன? எதிர்கால உள்நாடு மற்றும் வெளிநாடு கல்வி பற்றிய ஓர் அலசல், என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? எப்படி படிக்கலாம்? எப்போது படிக்க லாம்? ஆகியவற்றின் விரிவான விளக்கங்கள், கல்வி உதவித் தொகை குறித்த ம(i)றக்கப்பட்ட உண்மைகள் போன்றவற்றை குறித்து மேலதிக விபரங்களை அறிந்து கொள்வதற்கும், அனைவரும் தெரிந்து கொள்வதற்கும், கல்வி குறித்த கருத்துக்களை பரிமாறிக் கொள்வதற்கும், சந்தேகங்களில் தெளிவு பெறுவதற்கும்... 'சாதிக்க வைப்போம்!' என்ற கருப்பொருளில் 'இரண்டாவது கல்வி விழிப்புணர்வு முகாம்' மற்றும் 'கருத்து பரிமாற்ற நிகழ்வு' நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
இச்சிறப்புமிகு விழிப்புணர்வு முகாம் நிகழ்ச்சிக்கு சங்கத்தின் துணைத்தலைவர் மவ்லவீ M.S. முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ தலைமையேற்க, சங்கத்தின் தலைமை நிலைய சொற்பொழிவாளர் மௌலவீ ஹாஃபிழ் காரீ A.R. முஹம்மது அலி ரஷாதி ஃபாஜில் மழாஹிரி கிராஅத் (இறைமறை திருக்குர்ஆன் வசனங்கள்) ஓத, சங்கத்தின் இணைப்பொருளாளர் அல்ஹாஜ் H. முஹம்மத் நாஸர் வரவேற்புரையாற்ற, சங்கத்தின் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A., PGDCA., நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதுடன் கல்வி விழிப்புணர்ச்சி முகாம் குறித்த நோக்கங்கள், சச்சார் குழு அறிக்கை, ஜமாஅத் அமைப்புகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து அறிமுகவுரையாற்ற நிகழ்ச்சி இனிதே துவங்கியது.
திருநெல்வேலி ஷஃபி கல்வி அறக்கட்டளையின் தாளாளரும், குவைத் இண்டிகிரேடட் கலாசாலையின் மூத்த நிர்வாக அதிகாரியும், சிறந்த கல்வியியல் ஆய்வாளருமான முனைவர் பேராசிரியர் M. அப்துல் ஹமீத் M.Sc., M.Phil, B.Ed., PhD., 'பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு, வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள், மொழியியல் சிந்தனைகள், கல்வி உதவித்தொகை விபரங்கள்' குறித்தும், குவைத் யுனிவர்ஸல் அமெரிக்கன் கலாசாலையின் கல்வியியல் ஆலோசகரும், குவைத் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமான ஓட்டி (பைலட்) பயிற்சியாளரும், சிறந்த மனோதத்துவ அறிஞருமான பேராசிரியர் A. அப்துர் ரஹீம் M.A., M.Ed., QTIC, 'பெண்கல்வியின் முக்கியத்துவம், பிள்ளைகளை படிக்க வைப்பது எப்படி?, வெளிநாட்டு படிப்புகள் எவை? சமுதாய முன்னேற்றத்திற்கு நாம் செய்ய வேண்டியது என்ன?' என்பது குறித்தும் சிறப்புரையாற்றினர்.
முக்கிய தகவல்கள், செய்திகள், முகவரிகள் மற்றும் செயல்முறை விளக்கங்கள் போன்றவை ஒளிப்படக் கருவியின் மூலம் திரையிடப்பட்டது பார்வையாளர்களுக்கு மிகப்பேருதவியாக இருந்தது. பிள்ளைகள் நலன், பெற்றோர் நடைமுறை, சமுதாய செயற்பாடு, கல்வி மற்றும் கல்வி உதவித் தொகை குறித்து பங்கேற்பாளர்கள் தரப்பில் எழுப்பப்பட்ட அனைத்து சந்தேகங்களுக்கும் இரு பேராசிரியர்களும் தெளிவாக பதில் அளித்தனர்.
குவைத்தில் சங்கத்தின சார்பாக தமிழில் வெளியாகும் முதல் இலவச இதழான 'K-Tic பிறை செய்தி மடல்' மாத இதழின் சிறப்பு வெளியீடாக (தமிழக இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பத்திரிகைகள் வாயிலாக வெளியிடப்பட்ட இந்திய மற்றும் தமிழக முஸ்லிம்களின் கல்வி பொருளாதார நிலை குறித்த ஆய்வு, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ, பொறியியல் கல்வி, உயர் கல்வி, தொலைநிலை மற்றும் திறந்த வெளிக் கல்வி குறித்த விபரங்கள், கல்வி உதவித் தொகைகள் மற்றும் பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய 28 தொகுப்புகள் அடங்கிய) 'கல்வி / உதவித்தொகை சிறப்பு தகவல் களஞ்சியம் - 2008' தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
சங்கத்தின் இணைப் பொதுச் செயலாளர் அல்ஹாஜ் A.K.S. அப்துல் நாஸர் B.A., ADCA., நன்றியறையாற்ற, சங்கத்தின் உலமாக்கள் குழு உறுப்பினர் மவ்லவீ ஹாஃபிழ் A.R. முஹம்மது இப்ராஹீம் மன்பயீ துஆ ஓத சிற்றுண்டியுடன் இரவு 10.30 மணிக்கு முகாம் இனிதே நிறைவுற்றது.
இச்சிறப்பு மிகு விழிப்புணர்வு முகாமில் குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (KIUML) அமைப்பாளர் டாக்டர் K.S. அன்வர் பாட்சா, குவைத் தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை(TMCA)யின் தலைவர் அல்மாஸ் முஸ்தஃபா, துணைத்தலைவர் ஆசிரியர் ஷவ்கத் அலி, கல்விப்பிரிவு செயலாளர் ஹிதாயத்துல்லாஹ், தமுமுக குவைத் மண்டல தலைவர் அ. அமானுல்லாஹ், முத்தழிழ் மன்ற தலைவர் கவிஞர் அ. ஷம்சுத்தீன் மற்றும் குவைத்தின் பல பகுதிகளிலிருந்தும் தமிழக உலமாக்கள், கல்வியாளர்கள், பத்திகையாளர்கள், தொழிலதிபர்கள், வியாபாரிகள், பணியாளர்கள், பல்வேறு இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் களப்பணியாளர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர். அல்ஹம்து லில்லாஹ்.
Bismillahir Rahmanir Raheem
"2nd Educational Awareness Camp" and "Exchanges of Thoughts" Conducted by "Kuwait Tamil Islamic Committee (K-Tic)"
The "2nd Educational Awareness Camp" and "Exchanges of Thoughts" program conducted for Tamil Community (living in Kuwait) in Tamil on May 23, 2008 Friday @ 6:00 pm up to 10:30 pm by 'Kuwait Tamil Islamic Committee (K-Tic), Kuwait' at Rifayee Diwaniya (Near Al-Arabi Stadium), Mansoriya, Kuwait.
The program was presided over by Moulavi M.S. Mohammed Meera Sha Fazil Baaqavi, Vice President, K-Tic and started with recital from Holy Al-Qur'an by Moulavi Hafiz Qari A.R. Mohammed Ali Rashadi Fazil Mazahiri, Lecture Wing, K-Tic while welcome speech was made by Al-Haj H. Mohammed Nasar, Deputy Treasurer, K-Tic. The whole camp was convened, inaugurated & listed by Parangi Pettai Moulavi Afzal-ul-Ulamaa A.B. Khaleel Ahmed Baaqavee M.A., PGDCA, General Secretary, K-Tic.
The Special speeches were delivered by K-Tic's Educational Wing secretaries:
Dr. M. Abdul Hameed M.Sc., M.Phil, B.Ed., PhD.,
Senior Teacher and Administrative Officer,
Integrated School, Jaleeb, Kuwait & Trustee,
Shafi Educational Trust, Thirunelveli, Tamilnadu, S.India.
Professor A. Abdur Raheem M.A., M.Ed., QTIC,
Advisor, Kuwait Universal American School, Hawally,
Kuwait & Pilot Instructor, Kuwait Airways, Kuwait.
A exclusive special souvenir, "K-Tic Pirai Saithi Madal" (usual The 1st Monthly Tamil Free Newsletter magazine in Kuwait) was released as "The Encyclopedia of Education and Scholarships - 2008 Special Issue".
Before concluding the program at 9.30pm., a questionnaire section was conducted. Both Professors replied on questions and doubts on Education, Job and scholarship position / situation in Tamilnadu and India. The spectators requested K-Tic to carryout more such camps which will be very useful for the community.
The vote of thanks delivered by Al-Haj A.K.S. Abdul Nazar B.A., ADCA., Deputy General Secretary, K-Tic. The Dua made by Moulavee Hafiz A.R. Mohammed Ibraheem Manbayee, Member, Islamic Scholars (Ulamaa) Wing, K-Tic. The program was concluded at 10.30 pm with light dinner.
The program was attended a large number of Tamil Muslim brothers with their relatives and friends from various parts of Kuwait and also from various Tamil Islamic / Muslim Associations such as Dr. Anwar Batcha, Organizer, Kuwait Indian Union Muslim League (KIUML), Mr. Almas Mustafa, President, Tamilnadu Muslim Cultural Association (TMCA), Mr. Showkath Ali, Vice-President, TMCA, Mr. Hidhayathullah, Secretary, Education Wing, TMCA, Mr. A. Amanullah, President, TMMK Kuwait Regional and Mr. A. Shamshudeen, President, Muththameezh Mandram, Kuwait.
|
|