குவைத்திலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு நேரடி வாராந்திர விமான சேவை வழங்குகிறது இண்டிகோ; தொடர் முயற்சியில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்
அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்
-வள்ளுவன் வாக்கு.
குவைத் – திருச்சிராப்பள்ளி நேரடி விமான சேவையை தற்போது வழங்குவது இண்டிகோ விமான நிறுவனம் ஆகும். வரும் மார்ச் மாதம் முழுவதும் தற்காலிகமாக வாரநாட்களின் செவ்வாய்க்கிழமைகளில் குவைத் பன்னாட்டு விமானநிலையத்தில் மதியம் 12.00 மணிக்கு புறப்படும் இண்டிகோ 6E 8734 விமானமானது திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தினை இரவு 19.25க்கு வந்தடையும்.
குவைத் வாழ் தமிழர்களின் கால்நூற்றாண்டிற்கு மேற்பட்ட கனவான திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்திற்கு நேரடி விமானசேவை என்பது தற்போது தற்காலிகமாக நனவாகி வருகின்றது.
தற்போதைய அசாதாரண நோய்த்தொற்று காலத்தில், குவைத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு திரும்ப விழையும் பயணிகள் அங்கு குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பதியவேண்டும் என்ற நடைமுறையால் நீண்ட காலமாக நாம் கேட்டுவந்த கோரிக்கையானது உறுதிசெய்யப்பட்டது. குவைத்தில் உள்ள பெரும்பாலான தமிழர்கள் தங்கள் விருப்பமான விமானநிலையமாக திருச்சிராப்பள்ளியை தேர்வு செய்தனர். இதனால் நாம் பல காலமாக கூறிவந்த குவைத்தில் உள்ள பெரும்பாலான தமிழர்கள், திருச்சிராப்பள்ளி், பெரம்பலூர், நாமக்கல், தஞ்சாவூர் மற்றும் காவிரிப்படுகை மாவட்டங்கள் என்பது உறுதியாயிற்று.
மேலும் அங்குள்ள பல்வேறு தமிழ் அமைப்புகள் தொடர்ந்து இந்திய விமானநிறுவனங்களுக்கும், மத்திய அரசின் பயணிகள் விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சகத்திற்கும், திருச்சிராப்பள்ளிக்கு நேரடி விமானசேவை வேண்டும் என்று அழுத்தமாக கோரிக்கை வைத்து வந்தன. இதன் எதிரொலியாக தற்போது சோதனை முயற்சியாக இண்டிகோ விமானநிறுவனமானது தற்காலிகமாக வரும் மார்ச் மாதத்தில் அனைத்து செவ்வாய்க்கிழமைகளிலும் குவைத்தில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கு நேரடி விமானசேவை வழங்கவுள்ளது. மேலும், இந்தியர்கள் குவைத்திற்குள் நுழைய இருந்த தடையானது சில நிபந்தனைகளுடன் வரும் பிப்ரவரி 21ம் தேதி முதல் தளர்த்தப்பட உள்ளதால், குவைத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு விடுமுறையில் வரும் பயணிகளிடம் தயக்கம் இருக்காது என நம்புகிறோம். எனவே தேவையுடைய பயணிகள் இந்த இண்டிகோ விமானநிறுவனத்தின் திருச்சிராப்பள்ளிக்கான நேரடி விமானசேவையை பயன்படுத்தி ஒத்துழைப்பு தரும்படி வேண்டுகிறோம்.
“நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்” என்று கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்ட வள்ளுவன் வாக்கிற்கு இணங்க, முடியும் என்ற நம்பிக்கையுடன் தளராது குவைத்தில் உழைத்த அனைத்து தமிழ் அமைப்புகளுக்கும், இயக்கங்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும், தன்னார்வலர்களுக்கும், குறிப்பாக இந்தியன் ஏர்லைன்ஸ் IC 993/994 & IC 995/996 விமானங்கள், அதாவது “திருச்சிராப்பள்ளி – கோழிக்கோடு – ராஸ்-அல்-ஹைமாஹ்/புஜைராஹ் – குவைத்” என்ற வாராந்திர சேவைகள் கடந்த 2007 ல் நிறுத்தப்பட்டதில் இருந்து கடந்த 13 வருடங்களாக தொடர்ந்து போராடி வந்த “குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)”, காயிதே மில்லத் பேரவை மற்றும் குவைத் திமுகவிற்கு நமது நிறைவான நன்றி!
நமது கோரிக்கையை கவனமுடன் பரிசீலித்து இந்த நெருக்கடியான காலத்திலும் நம்பிக்கையுடன் சேவை வழங்கிய இண்டிகோ விமானநிறுவனத்திற்கும் நமது நிறைவான நன்றி.
இந்த சேவை வெற்றிபெற, தொடர, நாம் அனைவரும் ஒத்துழைப்போம்.
குவைத்திற்கு மேலும் நிறைய எதிர்பார்க்கிறோம்!
ட்விட்டரில் தொடர..
https://twitter.com/TrichyA…/status/1363484503289782274…
இன்ஸ்டாகிராமில் தொடர..
https://www.instagram.com/p/CLjndj_FdPb/…
It is Kuwait 🇰🇼
Lovely 💙 bird has started new benchmark in Tiruchirappalli.
Thank you Indigo.
During March month, Indigo will operate a special flights between Kuwait and Tiruchirappalli on Tuesdays under “Air Bubble” agreement.
#Tiruchirappalli_Sharjah_25thYear #TRZ #Trichy #Tiruchirappalli #TrichyAirport #TrichyAviation
#6E #Indigo_6E #InterglobeAviation
#KWI #KuwaitAirport #Kuwait
நன்றி : https://www.facebook.com/348254165197238/posts/3890623650960254/
www.k-tic.com