அன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…….
(K-Tic)குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் இரங்கல் செய்தி
குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் கல்விக் குழு துணைச் செயலாளர்
திருபுவனம் அப்துல் மாலிக் அவர்களின் தாய்மாமாவும்,
பாபராஜபுரம் மெயின் ரோடு ஜனாப் முஹம்மது ரஃபீக், ராஜா அவர்களின் தகப்பனார்
ஜனாப் ரெஜா மைதீன் அவர்கள் ( 18/01/2020) இரவு வஃபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அண்ணாரின் ஜனாஸா (19-01-2020) மதியம் லுஹர் தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டது.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜன்னதுல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) பிரார்த்தனை செய்கிறது.
உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படியும், வாய்ப்புள்ளவர்கள் இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு குவைத், ஃகைத்தான் கே-டிக் தமிழ் பள்ளிவாசலில் நடைபெறும் சிறப்பு துஆ மஜ்லிஸில் குவைத் வாழ் சகோதர, சகோதரிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
ஆறுதல் சொல்வதற்கு…
ஜனாப்
அப்துல் மாலிக் (திருபுவனம்)
குவைத் +96596962535
நன்றி! வஸ்ஸலாம்!!
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
+965 9787 2482
www.k-tic.com