Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
Breaking News
Home / சங்கப்பலகை / குவைத்தில் நடைபெற்ற ஐம்பெரும் விழா; மூன்றாயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு!

குவைத்தில் நடைபெற்ற ஐம்பெரும் விழா; மூன்றாயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு!

*குவைத்தில் நடைபெற்ற ஐம்பெரும் விழா; மூன்றாயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு!*

குவைத்தில் இயங்கி வரும் தமிழ் அமைப்பான குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (கே-டிக்) ஏற்பாடு செய்த சங்கத்தின் 14ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி, ஹிஜ்ரா / இஸ்லாமியப் புத்தாண்டு நிகழ்ச்சி, சமூக / கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி, நூல்கள் வெளியீடு, இஸ்லாமிய குடும்பவியல் நிகழ்ச்சி மற்றும் கர்பலா சிறப்பு நிகழ்ச்சி உள்ளிட்ட ஐம்பெரும் விழா சங்கத்தின் தலைவர் மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ அவர்களின் தலைமையில் செப்டம்பர் 13, 2018 வியாழன் இரவு குவைத்தில் உள்ள ஃகைத்தான் தமிழ் பள்ளிவாசலில் “ஹிஜ்ரா… ஒரு ஆளுமையை தேடிய பயணம்” என்ற தலைப்பில் “ஹிஜ்ரா / இஸ்லாமியப் புத்தாண்டு” நிகழ்ச்சியாக தொடங்கியது.

இந் நிகழ்ச்சிகள் அனைத்திலும் சென்னை பாலவாக்கம் மஸ்ஜிதே மஹ்மூத் தலைமை இமாம் மவ்லவீ பன்னூலாசிரியர் “ஏ.யூ. முஹம்மது அபூபக்கர் உஸ்மானி” அவர்கள் குவைத் அரசின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினார்.
IMG-20180926-WA0035

IMG-20180926-WA0034

IMG-20180926-WA0033

IMG-20180926-WA0032
வெள்ளிக்கிழமை (14/09/2018) நண்பகல் ஜும்ஆ சிறப்பு நிகழ்ச்சி “கல்வி பெற்ற சமூகமே வெற்றியடையும்” என்ற தலைப்பில் “கல்வி விழிப்புணர்வு” நிகழ்ச்சியாகவும், இரவு நிகழ்ச்சி “முன்மாதிரி முஸ்லிம் பெண்கள்” என்ற தலைப்பில் “இஸ்லாமிய குடும்பவியல்” நிகழ்ச்சியாகவும், சனிக்கிழமை (15/09/2018) இரவு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் 14ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி “சமூகப் பணியும்… சன்மார்க்கக் கடமையும்…” என்ற தலைப்பில் குவைத் தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்ற கருத்தரங்கமும் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் குவைத் பள்ளிவாசல்கள் துறை சார்பில் இமாம் அஷ்ஷைஃக் முத்லக் அபூ அலீ, வெற்றியூர் க.மீ. அன்பரசன் (தாய்மண் கலை இலக்கியப் பேரவை (விசிக), குவைத்), முகவை எஸ். அப்பாஸ் (திண்ணைத் தோழர்கள் பிரச்சார மையம், குவைத்), வல்லம் எஸ். முஹம்மது அப்பாஸ் (ஃபிடா, குவைத்), ஆழ் மன மொழி வல்லுநர் எம்.எம்.கே. முனாஃபுத்தீன் (ஆலோசகர், கே-டிக்) ஆகியோர் “சங்கம் இதுவரை செய்தது என்ன? இனி செய்ய வேண்டியது என்ன?” என்ற கருப்பொருளில் கருத்துரை வழங்கினர். கருத்துரை வழங்கிய அனைவரும் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். சிறப்பு அன்பளிப்புகளும் வழங்கப்பட்டன.

செப்டம்பர் 20, 2018 வியாழன் இரவு “உறையும் இரத்தம் கர்பலாவின் யுத்தம்” என்ற தலைப்பில் “கர்பலா சிறப்பு” நிகழ்ச்சியாகவும், வெள்ளிக்கிழமை (21/09/2018) நண்பகல் ஜும்ஆ சிறப்பு நிகழ்ச்சி “இளைய சமுதாயமே…” என்ற தலைப்பில் “சமூக விழிப்புணர்வு” நிகழ்ச்சியாகவும், நிறைவு விழாவாகவும் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினருக்கு “இளம் சொல்லருவி” என்ற விருது வழங்கப்பட்டதுடன் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டது.

நான்கு நூல்கள் மற்றும் இரண்டு குறுந்தகடுகள் வெளியீட்டு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினர் வெளியிட குவைத்தின் முக்கிய பிரமுகர்கள் பெற்றுக் கொண்டனர். அனைத்து நிகழ்ச்சிகளையும் பொதுச்செயலாளர் மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ ஒருங்கிணைப்பு செய்தார்.

சங்கத்தின் துணைத்தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ, இளவல்கள் எம். முஹம்மது தஸ்னீம், ஷேக் அமீர் மற்றும் சி. நபீல் ஆகியோர் கிராஅத் ஓதி தொடங்கி வைத்தனர். தாயகத்திலிருந்து ஆவடி முஹம்மது ஃபாரூக் உஸ்மானி, சங்கத்தின் துணைத்தலைவர் மவ்லவீ எஸ்.ஏ.கே. முஹம்மது இப்ராஹீம் நூரானீ காஷிஃபி, இஸ்லாமியப் பாடகர் திருபுவனம் ஜாஹிர் ஹுஸைன் மற்றும் செல்வி ஷஜ்னா மும்தாஜ் ஆகியோர் இஸ்லாமிய பாடல்களை பாடினர்.

இணைப் பொருளாளர் ஹச். முஹம்மது நாஸர் நன்றியுரையாற்றினார். சிறப்பு விருந்தினர் ஏ.யூ. முஹம்மது அபூபக்கர் உஸ்மானி மற்றும் சங்கத்தின் தர்பியா / திக்ர் / துஆ மஜ்லிஸ் குழு செயலாளர் அல்ஹாஜ் ஏ. ஷாஜஹான் ஹழ்ரத் ஆகியோரின் பிரார்த்தனைகளுடன் நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவுற்றன.

இரண்டு வாரங்களில் ஐந்து நாட்கள் தொடராக நடைபெற்ற ஆறு நிகழ்ச்சிகளில் குவைத்தில் வசித்து வரும் சுமார் மூன்றாயிரத்திற்கும் அதிகமான நபர்கள் வரை கலந்து கொண்டனர். அனைவருக்கும் தேநீர், பழரசம், பேரீத்தம் பழம், சிற்றுண்டி மற்றும் இரவு உணவுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் களப்பணியாளர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.

மேலதிக செய்திகளுக்கும், படங்களுக்கும்…. https://m.facebook.com/story.php?story_fbid=2239756092764880&id=365350416872133

நிகழ்ச்சிகளின் முழு காணொளிகளை காண…

முகநூல் பக்கத்தில்…
1. www.facebook.com/q8tic/videos/2164354757136427
2. www.facebook.com/q8tic/videos/457547771420158
3. www.facebook.com/q8tic/videos/330150157545626
4. www.facebook.com/q8tic/videos/1604148876550515
5. www.facebook.com/q8tic/videos/322576724957432
6. www.facebook.com/q8tic/videos/269911020316509

யூடியூப் அலைவரிசையில்…
1. https://youtu.be/kGf1zZyuLdc
2. https://youtu.be/XVxgWqPGL7s
3. https://youtu.be/r6fMAOeJdWA
4. https://youtu.be/zA0bFnvutlo
5. https://youtu.be/m7CYujxigY4
6. https://youtu.be/7E0HVl89tsM

——————————
தகவல் தொடர்பு & ஊடகப் பிரிவு,
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),
குவைத்.

துரித சேவை / வாட்ஸ்அப் / வைபர் / டெலிகிராம் / ஸோமா / ஹைக் / ஸ்கைப் / டேங்கோ / பின்கிள் / மெஸஞ்சர் / அலைபேசி: (+965) 9787 2482
மின்னஞ்சல்: q8_tic@yahoo.com / ktic1427@gmail.com
இணையதளம் & நேரலை (Live) : www.k-tic.com
முகநூல் (Facebook) குழுமம் : https://www.facebook.com/groups/q8tic
நேரலை (Ustream) : http://www.ustream.tv/channel/ktic-live
ட்விட்டர் & நேரலை : @q8_tic
யாஹூ குழுமம்: http://groups.yahoo.com/group/K-Tic-group

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *