Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
Breaking News
Home / Uncategorized / உங்களுக்குத் தெரியுமா? / கவிக்கோ…. இவர்தான் கவிக்கோ…. – பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

கவிக்கோ…. இவர்தான் கவிக்கோ…. – பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

கவிக்கோ…. இவர்தான் கவிக்கோ….

– பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

-மதுரையில் உதித்த தமிழ் மாணிக்கம்
– வாணியம்பாடியில் பறந்த வானம்பாடி
– இவர் விதைபோல் விழுந்தவர்
– இவர் முட்டைவாசிகளின் உட்கரு

– பூக்காலம் தந்த கவிகளின் கார்காலம்
– இவரே முத்தமிழின் முகவரி
– சொந்தச் சிறைகள் இவரின் சிந்தனைகள்
– மரணம் முற்றுப்புள்ளி அல்ல இவருக்கும்

– பால்வீதியில் உலாவச் செய்த படைப்பாளி
– நேயர் விருப்பம் தந்த நேசர்
– சுட்டுவிரல் சுட்டும் சூரியன்
– ஆலாபனை பாடிய ஏவுகனை

– பித்தன் கொடுத்த சித்தன்
– மின்மினிகளால் ஒரு கடிதம் எழுதியவர்
– ரகசிய பூ அளிக்கும் ரசிகன்
– பறவையின் பாதை தேடும் பயணி

– இறந்ததால் பிறந்தவன் தந்த வல்லவர்
– தேவகானம் பாடிய கவிக்குயில்
– பாலை நிலா வழங்கிய பசுமை
– அவளுக்கு நிலா என்று பெயர் வைத்த கலா ரசிகர்

– விலங்குகள் இல்லாத கவிதை தந்த மனிதன்
– கரைகளே நதியாவதில்லை என கவலைப்பட்டவர்
– பூப்படைந்த சபதத்திற்கு பூச்சூடியவர்
– தொலைப்பேசிக் கண்ணீரில் தன்னை தொலைக்காதவர்

– காற்று என் மனைவி என்ற இயற்கை பிரியர்
– உறங்கும் அழகியை உலகிற்கு தந்தவர்
– நெருப்பை அணைக்கும் நெருப்பு இதுவே இவரின் தனிச்சிறப்பு
– பசி எந்தச் சாதி என விழிப்புணர்ச்சி செய்தவர்

– நிலவிலிருந்து வந்தவனை அறிமுகம் செய்தவர்
– கடவுளின் முகவரியை காண்பித்தவர்
– முத்தங்கள் ஓய்வதில்லை என முழங்கியவர்
– காக்கைச் சோறு படைத்திட்ட பண்பாளர்

– சோதிமிகு நவகவிதை தந்த போதி புத்தர்
– சிலந்தியின் வீடு கண்ட சிந்தனையாளர்
– இது சிறகுகளின் நேரம் என சிந்தித்தவர்
– இல்லையிலும் இருக்கிறான் என்ற இறைஞானி

– தட்டாதே திறந்திருக்கிறது என ஆர்வமூட்டியவர்
– எம்மொழி செம்மொழி என்ற உண்மைத் தமிழர்
– புதுக்கவிதையில் குறியீடு! இவரின் பூரண வெளிப்பாடு
– கம்பனின் அரசியல் கோட்பாடு! புதிய இலக்கிய புறப்பாடு

– குணங்குடியார் பாடற்கோவை பதிப்பித்த கவிக்கோவை
– கவியரசர் பாரி விருது பெற்ற கவிராயர்
– தமிழன்னை விருது பெற்ற கவி அன்னை
– பாரதிதாசன் விருது பெற்ற பாரதியார்

– கலைமாமணி விருது பெற்ற மாசிலாமணி
– அக்ஷர விருது பெற்ற கவி நக்ஷத்திரா
– சிற்பி விருது பெற்ற கவி சிற்பம்
– கலைஞர் விருது பெற்ற இளைஞர்

– ராணா இலக்கிய விருது பெற்ற கவி கானா
– சாகித்ய அகாடமி விருது பெற்ற கவி சாணக்கியர்
– கம்ப காவலர் விருது பெற்ற கவிக்காவலர்
– பொதிகை விருது பெற்ற பண்பாளர்

– கம்பர் விருது பெற்ற காவிய கவிஞர்
– சி.பா. ஆதித்தனார் இலக்கிய பரிசு பெற்ற சாதனையாளர்
– உமறு புலவர் விருது பெற்ற பெரும்புலவர்
– அண்ணா கவியரங்கங்குகளின் கவி அண்ணன்

– மதுரையில் தமிழ்நாட்டை நடத்தியவர்
– சென்னையில் தமிழனை நடக்க வைத்து
– மக்களுக்கு நேசனாக மாற்றி
– கவிக்கோவாக வலம் வந்தவர்

– சிவகங்கையில் அன்னத்தை தூது விட்டவர்
– சமநிலைச் சமுதாயம் உருவாக ஆலோசனை சொல்பவர்
– தமிழ் ஆசிரியர் பணியில் தன்னை கரைத்தவர்
– தமிழ்த்துறைத் தலைவராக பரிணமித்தவர்

– ஜுனியர் போஸ்ட்டின் சீனியர் கவி ஆஃபிஸர்
– ஜுனியர் விகடனில் சீனியராக எழுதியவர்
– பாக்யாவில் பவனி வந்த பாட்டரசர்
– குமுதம் ரிப்போர்ட்டரின் பூக்கால செய்தியாளர்

– சன் தொலைக்காட்சியின் கவி ஞாயிறு
– விண் தொலைக்காட்சியின் கவி சந்திரன்
– கவிராத்திரி கவியரங்க கதாநாயகன்
– புதுக்கவிதைகளை தந்திட்ட புதுமைப்பித்தன்

– உருதுக் கவிதைகளுக்கு தமிழில் உரு கொடுத்தவர்
– கஸல் வடித்த தமிழின் கவி அஸல்
– நஜ்ம் வடிவங்களை அறிமுகப்படுத்திய கவி நட்சத்திரம்
– ஜப்பானிய ஹைக்கூ தந்த தமிழ் கவிதை ரோபோ

– மீமெய்ம்மை இயல் தந்திட்ட கவி விஞ்ஞானி
– இரு சீர் ஓர் அடி கற்றுக் கொடுத்த இலக்கணவாதி
– புது கவிதையில் குறியீடு தந்த புதுக்கவிஞன்
– தமிழில் நவீன இலக்கியம் வடித்த இலக்கியவாதி

– ஆறாவது விரலுடைய ஏழாவது அறிவுடையவர்
– சமய நல்லிணக்கம் சமைத்திட்ட கலைஞன்
– சீவக சிந்தாமணியை சிதறாதமல் தந்த சிந்தனைவாதி
– திருக்குறளை திக்கெட்டும் பரப்பிய கவி வள்ளுவர்

– பெர்க்லி பல்கலையில் தமிழ் ஆய்வு இருக்கை ஏற்படுத்திய தமிழறிஞர்
– உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டை நடத்திய இஸ்லாமியத் தமிழர்
– தமிழ் இலக்கியச் சங்கப் பலகைகுறள்பீடத்தில் பணியாற்றிய சங்கையாளர்
– ஆட்சி மொழிக் குழுவில் ஆலோசகராகப் பணியாற்றிய செம்மொழியாளர்

– உருது மொழிக்குழுவில் பணியாற்றிய உறுதியானவர்
– தமிழ்மொழி மேம்பாட்டு வாரியத்தில் பணியாற்றிய பண்பாளர்
– இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் நெறியாளர்.
– தமிழ் நாடு வக்பு வாரியத்தின் தகுதி மிகு தலைவர்

– திருக்குர்ஆனையும், திருநபி மொழிகளையும் தமிழால் திக்கெட்டும் பரவச் செய்யும் இறையடியார்

கவிக்கோ கருவூலத்தில் இடம்பெற்ற என் வார்த்தைகள்

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *